Monday, October 6, 2008

மனம் என்னும் குப்பை தொட்டி


மனம் என்னும் குப்பை தொட்டி.உங்கள் மனத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் நீங்களாகவே இருக்கிறீகளா?அது உங்களுக்கு தெரியாது.ஏனென்றால் நீங்களே யார் என்று உங்களுக்கு தெரியாது.பிறகு மனதில் என்னதான் இருக்கிறது?நீங்கள் இவ்வுலகில் பிறக்கும்போது கொண்டு வந்த பதிவுகள்,உங்கள் தாய் வயிற்றில் இருந்தபோது பதியப்பட்ட சம்பவங்கள்,பிறந்த பிறகு இன்று வரை உங்களுக்கு மற்றவர்கள்வழங்கிய அறிவுரைகள்,திட்டுக்கள், மற்றும் நீங்களாகவே மற்றவர்களை பார்த்து, கேட்டு அவர்கள் போல் நடக்க பழகியது தொடர்பான பதிவுகள் இவைகள்தான் உங்கள் மனதில் இருக்கிறது.அவைகள் எல்லாவற்றையும் கூண்டோடு வாரி வெளியே அப்புரபடுத்தினால்தான் நீங்கள் யார் என்பதை உங்களால் அறிய முடியும்.அது அவ்வளவு எளிதான காரியமில்லை இருந்தாலும் சிலர் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளார்கள்.
அவர்களில் ஒருவர்தான் பகவான் ரமண மஹரிஷி..
Posted by Picasa
அவர் கூறுகிறார்.உன் மனதில் உள்ள அனைத்து எண்ணங்களையும் நீக்கிவிட வேண்டும்.புதிதாக எண்ணங்களையும் தோற்றுவிக்ககூடாது.அப்போதுதான் பொய்யான நான் மறைந்து உண்மையான நான் பிரகாசிக்கும்.அதற்க்கு மேலும் ஒரு உதாரணம் கூறுகிறார். சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் வெட்டியான் பிணத்தை எரிக்கும் போது தடி கொண்டு பிணத்தை தட்டி தட்டி நன்றாக எரிந்து சாம்பலாகும் வரையில் அங்கு இருந்து கண்காணித்து கடைசியில் அந்த தடியையும் நெருப்பில் போட்டுவிடுவான். அதைப்போல மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களையும் ஒரு பார்வையாளனாக இருந்து கண்காணிக்கவேண்டும். எண்ணங்கள் தோன்றும்போதே அது யாருக்கு தோன்றுகின்றன என்று பார்த்தல் வேண்டும். தனக்கு என்று தோன்றும்போது நான் யார் என்று மனதிற்குள் கேள்வி எழுப்ப வேண்டும் அப்போது நான் என்றால் யார் ? இந்த உடலா,மனமா,என்ற சிந்தனை பிறக்கும் .தோன்றிய எண்ணம் மறைந்துவிடும்.எண்ணங்களின் தொகுப்புதான் மனம். எண்ணங்களே இல்லை என்றால் இந்த உடலும் இல்லை,உலகமும் இல்லை,ஆன்மா மட்டும்தான் நிற்கும்.பிறகு என்ன எந்நேரமும் தடையில்லா ஆனந்தம்தான். முயற்சி செய்தால் நிச்சயம் அடையலாம்..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home