Monday, October 20, 2008

திருமூலர் காட்டும் பரம்பொருள்

திருமூலரின் திருமந்திரத்திற்கு பண்டிதர்கள் பலவிதமாக பொருள் கூறுவார்கள்.ஆனால் என்னை போன்ற படிக்காத பாமரர்கள் கூறும் விளக்கத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம்.

ஒரு யானை பொம்மை ஏதோ
ஒரு மரத்தால் செய்யப்பட்டுள்ளது.
அந்த பொம்மையை பார்க்கும்போது
முதலில் நம் மனதில் தோன்றுவது அது ஒரு யானை பொம்மை என்றுதான்.
பிறகு அது அழகாக இருக்கிறதா,யார் செய்தது, எங்கு வாங்கியது,
என்ன விலை ,இந்த பொம்மையை நாமே வைத்து கொள்ளலாமா
அல்லது யாருக்காவது பரிச்ளிக்கலாமா என்றெல்லாம்
தொடர்ந்து மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றுகின்றன .
அல்லது நம் கவனம் வேறு எந்த பொருள் மீதோ
அல்லது ஏதாவது வேதனையில் மூழ்கி இருந்தாலோ அந்த பொம்மை நம் எதிரில் இருந்தும் அது நம்மை பாதிப்பதில்லை.
நாம் யானையை மட்டும் மனதில் கொண்டு பார்க்கும்போது
அது மரத்தினால் செய்யப்பட்ட யானையா
அல்லது உலோகத்தினால் செய்யப்பட்ட யானையா என்பதை பற்றி சிந்திப்பதில்லை.
ஆனால் பொம்மை எந்த மரத்தினால் செய்யப்பட்டுள்ளது
என்று ஆராயும்போது யானையை மறந்துவிடுகிறோம்.

அதைத்தான் திருமூலர் ஒரு உண்மையை உணர்த்துகின்றார்.
மனம் எதை நினைக்கின்றதோ அதைத்தான் வெளி உலகில் காண்கின்றோம் என்பதை
தெளிவாக உணர்த்துகின்றார்.
மேலேகண்ட உதாரணத்தின் மூலம் பரம்பொருளை நமக்கு உணர்த்த முற்ப்படுகின்றார்

பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம்.

பரம் என்றால் பரம்பொருள் அதாவது கடவுள்.
கடவுள் நம் எதிரிலேயே இருக்கிறார்,மற்றும் நமக்குள் இருந்துகொண்டும் நம்மை எல்லாம் இயக்கவும் செய்கிறார்.
கடவுள் நம் எதிரிலேயே இருந்தால் அவர் ஏன் நம் கண்களுக்கு தெரியவில்லை?
காரணம் என்ன?
நாம்தான் காரணம்,நம் எண்ணம்தான் காரணம்.எப்படி?
கடவுளை நாம் காண முடியாமல் மறைப்பது எது?அதுதான் பார் முதல் பூதம்
பார் என்றால் என்ன ?
இந்த உலகம் .மற்றும் இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்கள் .
இவைகளுடன் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருப்பதால் இவை அனைத்திற்கும் ஆதாரமான பரம்பொருளை நம் எதிரிலேயே இருந்தும் நம்மால் காண முடிவதில்லை.
இவைகளை பற்றியே நாம் எப்போதும் சிந்தித்துகொண்டிருப்பதால்
அவைகளை பற்றிய எண்ணங்கள்
பரம்பொருளை நாம் காண முடியாமல் செய்துவிடுகின்றன.
அதற்க்கு என்ன வழி?
நாம் இவ்வுலகம் மற்றும் அனைத்து உயிரினங்களை மறந்து
பரம்பொருளை மட்டும் சிந்தித்தோமானால்
அவைகள் அனைத்தும் மறைந்து பரம்பொருள் மட்டும் நமக்கு காட்சியளிக்கும்.
இந்த உண்மையை புரிந்துகொள்ள
இன்னும் ஒரு உதாரணம்
ஒரு வெள்ளை சுவரை பரம்பொருள் என்று வைத்து கொள்வோம்.
அதில் உள்ள ஒரு கரும்புள்ளி பார் முதல் பூதம் என்று வைத்துகொள்வோம்
சுவரை மட்டும் நாம் பார்த்தால் கரும்புள்ளி தெரியாது.
புள்ளியை பார்த்தால் சுவர் தெரியாது.
ஆனால் இரண்டும் நம் கண் முன்னேதான் இருக்கின்றன.
எல்லாம் நம் பார்வையில்தான் இருக்கிறது.
பார்க்க தெரிந்துகொண்டுவிட்டால்
உண்மைகள் தானே புரிந்துவிடும்.
குழப்பங்கள் தீர்ந்துவிடும்
வேறுபாடுகள் அகன்றுவிடும்
உள்ளத்தில் அமைதி பிறந்துவிடும்
.

4 Comments:

At February 8, 2009 at 10:48 PM , Blogger Unknown said...

very nice. Pl.let me know about NATTAKALLAI DEIVAMENRU engira cheyyul.
prrminihall@gmail.com

 
At March 1, 2009 at 5:57 AM , Blogger aanandam said...

நட்ட கல்லை தெய்வம் என்று கோடானு கோடி பேர்கள் நம்புகிறார்கள்.
நாலு என்ன நாற்ப்பது சுற்றும் சுற்றுகிறார்கள்
தெய்வம் இதுவரை பேசியதா?
ஏதோ கோடியில் ஒருவரின் செவிகளுக்கு மட்டும் பேசியது கேட்டதாக எழுதிவிட்டு போனதை தற்போது ஆலயங்களில் தெய்வங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் அங்கு வருபவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நட்ட கல் பேசுமோ?
நாதன் நமக்கு உள்ளே இருக்கையில் என்று ஒரு சித்தர் பேசுகிறார்
இதன் பொருள் என்ன?
இந்த பாட்டை படித்துவிட்டு நமக்குள்ளே கடவுள் இருப்பதை அறிய முயற்சி செய்தவர்கள் கோடியில் சிலரே. அதிலும் வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவு.
கல் அக்றிணை பொருள்
எந்த நிலையிலும் அது பேசாது
பின் ஏன் மக்கள் ஆலயத்திற்கு செல்வதும் வருவதுமாக ஆண்டாண்டுகாலமாக செய்ததையே செய்துகொண்டிருக்கிறார்கள்.?
அதுதான் அறியாமை.
ஆட்டு மந்தைகள் போல் ஒருவர் செய்ததையே எல்லோரும் செய்துகொண்டிருகிறார்கள்.
வள்ளலார் சொல்லிவிட்டார் ஒளிதான் தெய்வம் என்று
திருமூலர் சொல்லிவிட்டார் வானுக்குள் கடவுளை தேடும் மதிஇல்லாதவர்களே
தேனுக்குள் இனிப்பு கலந்திருப்பதை போல் ஊனுக்குள் (உடலுக்குள்) ஈசன் ஒளிந்துள்ளான் என்று.
அன்பே கடவுள் என்று அனைத்து ஞானிகளும் ஒருங்கே சொல்லிவைத்துவிட்டு போயிருக்கிறார்கள் திருமூலர் மேலும் சொல்லியிருக்கிறார் இறைவன் கோயில் கொண்டுள்ள இந்த உடலை நன்றாக பாதுகாக்க வேண்டும் என்று.
ஞானிகள் எவ்வளவு சொன்னாலும் அவர்களின் கருத்தை மானிடம் புரிந்துகொள்ளும் தன்மையற்றதாய் இருக்கிறது.
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் எல்லா உயிர்களிலும் உறைந்துள்ள வாசுதேவனுக்கு வணக்கம் என்று சொல்லப்பட்டுள்ளது
நமக்குள் இறைவன் இருந்துகொண்டு நம்மை எல்லாம் இயக்குகின்றான்
நாம்தான் அவனை அறிந்துகொள்ளாமல் அறியாமையினால் அகந்தை கொண்டு நாமும் துன்பத்திற்கு உள்ளாகி பிறரையும் துன்பத்திற்கு உள்ளாக்குகின்றோம்
நமக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்துகொண்டால் எல்லோரின் இதயத்திலும் இறைவன் இருப்பதை உணர முடியும்
அனைவர் உள்ளத்திலும் இருப்பது ஒரே ஒரு பரம்பொருள் என்று தெரிந்துகொண்டு
விட்டால் வேறுபாடுகள் அகன்றுவிடும்.நமக்கும் இறைவனுக்கும் இடையில் நிற்கும் மனமும்,அறிவும் ,அகந்தையும் அகன்றால்தான் இறைவனை உணர முடியும்.இந்த உணர்வில்லாமால் ஆயிரம் ஆண்டுகள் கோயிலை சுற்றினாலும் அவனை அறிய முடியாது.
கடவுள் என்பதற்கு பொருள் கடமாகிய இந்த உடலுக்குள் இருக்கும் வஸ்து
அந்த வஸ்துவை அறிய நம் மனதை உடலுக்குள்ளே செலுத்தவேண்டும்
உடலுக்கு வெளியே தேடினால் எந்த காலத்திலும் கிடைக்காது.கிடைக்க போவதுமில்லை.
எனவே நட்ட கல்லில் நாதனை தேடுவதை விடுத்து நமக்குள்ளே அவனை தேடினால் அவன் நிச்சயம் நம்மோடு பேசுவான்
அதற்காக அவன் எப்போது காத்துக்கொண்டிருக்கிறார்.
அதற்க்கு கடினமாக முயற்சி தேவை
ஆனால் அதற்க்கு யாரும் தயாராக இல்லை
ஏதோ ஆலயத்திற்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சகரிடம் மற்றும் உண்டியலில் சில்லறையை போட்டுவிட்டு வந்துவிட்டால் இறை வழிபாடு முடிந்துவிட்டது என்று மக்கள் நினைக்கும்வரை இந்த தத்துவமெல்லாம் இங்கு எடுபடாது.இப்போது இவ்வுலகில் ஆன்மிகம் என்று பேசப்படுவதெல்லாம் சுயநலத்தை மையமாக கொண்டு செயல்படுத்தப்படும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களே
இவைகளிலிருந்து அவர்களை மீட்பது மிகவும் கடினம்.
அன்பில்லாத பக்தி உயிரில்லாத உடல் போன்றது.
உண்மையான பக்தன் யாரையும் காயபடுத்தமாட்டான்.
அதனால்தான் முன்னாளில் தொண்டர்குலம் எல்லாம் ஒன்றாக கருதப்பட்டது.
அவர்களில் பிரிவுகள் இல்லை ஆனால் இன்றோ எல்லாம் வியாபார நோக்கில் செயல்படுகிறது. கடவுள் இருக்கும் இடத்தில அநீதிகள் நிகழாது. இன்று கடவுளின் பெயரால் நடக்கும் அநீதிகள், அக்கிரமங்கள்,மோசடிகள் எல்லாவற்றிற்கும் மக்களின் கடவுள் தொடர்பான் மூட நம்பிக்கைகளே காரணம்.

 
At January 5, 2014 at 12:38 AM , Blogger Unknown said...

Thanks for the practical thinking.

 
At January 5, 2014 at 12:39 AM , Blogger Unknown said...

Thanks for the practical thinking.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home