Monday, October 20, 2008

மைகள் உணர்த்தும் பாடம்

இந்த உலகத்தில் எத்தனையோ மைகள் இருக்கின்றன.
சில மைகள் நமக்கு இன்பங்களை தருகின்றன
சில மைகள் நமக்கு துன்பங்களை பரிசாக தருகின்றன
சில மைகள் நமக்கு சில உண்மைகளை உணர்த்துகின்றன
மையில்லாவிடில் இந்த உலகமே இல்லை

இனி ஒவ்வொன்றாக மைகளை பற்றி அலசுவோம்.

முதலில் எதை தொடங்கினாலும் இறைவனை நினைந்து
தொடங்குவது இறை நம்பிக்கை உள்ளவர்களது மரபு.
காக்கும் கடவுளான திருமால் இந்த உலகை காக்க
எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று கூர்மாவதாரம் அதாவது
ஆமை உருவெடுத்து தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில்
அமுதம் பெற மந்தர மலையை மத்தாக கொண்டு கடையும்போது
அச்சு இல்லாத காரணத்தினால் மலை கடலில் மூழ்கியபோது
அதன் ஆமையாக உருவெடுத்து மலையை
மூழ்காமல் தடுத்து காப்பாற்றியது அனைவருக்கும் தெரியும்.
அவ்வாறு கடையும்போது கடலை கடைய மத்தாக பயன்படுத்தப்பட்ட
வாசுகி என்னும் பாம்பு ஆலகால நஞ்சை வெளிப்படுத்த
உலக உயிர்களை காப்பாற்ற சிவபெருமான் அந்த நஞ்சை உண்டதாகவும்
ஆனால் பார்வதி தேவி அந்த நஞ்சை
சிவபெருமானின் கண்டத்தில் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் .
புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன
இந்த கதையை பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளாக மக்கள் கேட்டு கொண்டு வருகிறார்கள்.
அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை
இதுவரைக்கும் புரிந்துகொள்ளவில்லை என்பதே என் துணிபு.
ஏனென்றால் புராண கதைகள் எதையும் நேரடியாக சொல்வதில்லை
ஒவ்வொரு கதைக்கு பின்னாலும் ஒரு கருத்து,
ஒரு இலக்கை அடைய வழிமுறைகள் நிச்சயம் இருக்கும்.
அதை ஆராய்ந்து அறிந்துகொண்டால்
நமக்கு உண்மையை உணர்ந்து உய்வதற்கு வழி வகுக்கும் .
இனி தொடர்ந்து ஆராய்வோம்.


ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற பழமொழி என் வந்தது.?

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது உலக வழக்கில் இருக்கும் ஒரு பழமொழி .

உலகில் எத்தனையோ பழமொழிகள் அதன் உண்மை தன்மையை இழந்து வழக்கத்தில் உள்ளதைபோல இந்த பழமொழியும் ஒன்று

. இந்த இடத்தில் வீடு என்பதை மனிதனின் மனம் பொருள் கொள்ள வேண்டும்

.அது சரி ஏன் ஆமை புகுந்த வீடு உருப்படாது ?

வீடு உருப்படுவதர்க்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு என்று யாரும் சிந்திப்பதில்லை

.முதலில் வழக்கில் உள்ள மொழியின் பொருளை பார்ப்போம் .

ஆமை என்றால் அறியாமை , பொறாமை என்று கொள்ள வேண்டும்

மக்கள் அதை வசதியாக மறந்து விட்டு அப்பாவி பிராணியான ஆமையை கண்டவுடன் அதை கொல்வதும் அதன் இறைச்சியை உண்பதும் செய்கின்றனர் .

ஆனால் அதன் உயரிய குணங்களை மனிதர்கள் கைகொண்டால் பல நூறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ முடியும் என்று பல பேருக்கு தெரியாது.

அதன் இதய துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் பல நூறு ஆண்டுகள் வாழ்கிறது.அதுபோல மனிதனும் உணர்ச்சி வசப்படாமல் தன் மூச்சினை கட்டுபடுத்தி இதய துடிப்பின் வேகத்தை குறைத்தால் அவனும் நீண்ட நாள் வாழ இயலும் என்பதை பல சித்த புருஷர்கள் நிருபித்து வாழ்ந்து காட்டி உள்ளார்கள்....

தன் உறுதியான மேல் ஓட்டுக்குள் தன் வாய் மற்றும் நான்கு கால்களை இழுத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துகொள்வதைபோல் மனிதனும் தன்னுடைய ஐம்புலன்களை வெளியே செல்லாமல் அடக்கி கட்டுபடுத்தினால் அவன் யோக மார்க்கத்தில் முன்னேற முடியும் என்பதற்க்கு உதாரணமாக ஆமையை தான் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

நிலைமை அப்படி இருக்க மக்கள் அமைதியான இந்த பிராணி மீது களங்கம் சுமத்தி அதை துன்புறுத்துவது அவர்களின் அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.

ஒரு மனிதனை அழிவு பாதையில் கொண்டு செல்வது பொறாமை என்ற ஆமையே.இந்த கெட்ட குணம் ஒன்று இருந்தால் போதும் மற்ற அனைத்து தீய குணங்களும் தானாகவே அவனிடம் வந்து சேர்ந்து விடும். பிறகு அவனும் உருப்படமாட்டான் , மற்றவரையும் உருப்படவிடமாட்டான். .அது மனத்தில் தோன்றியவுடன் அவன் நேர்மையாக சிந்திக்கும் பண்பை இழந்துவிடுகின்றான் .அவனின் தன்னம்பிக்கை போய்விடுகிறது . தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருந்தால் தானும் அதை குறுக்கு வழியில் பெற முனைகின்றான் .குறுக்கே வருகின்றவர்களை எல்லாம் வெறுக்கின்றான் ,அவர்களை அழிக்கவும் செய்கின்றான். முடிவில் அவனும் அழிந்து போகின்றான் .

எனவேதான் பொறாமை குணத்தை திருவள்ளுவர் அழுக்காறு என்று குறிப்பிடுகின்றார் .

எனவே உருப்படாமல் போவதற்கு ஆமை என்ற ஜந்து காரணமல்ல பொறாமை என்னும் தீய குணமே காரணம் என்பதை அறிந்துகொண்டு அந்த தீய குணத்திலிருந்து நம்மை விடுவித்துகொண்டால் நன்மைகளை அடையலாம்.என்பதே உண்மை .

எல்லாவிதமான துன்பத்திற்கும் மூலகாரணமான அறியாமையை பற்றி தொடர்ந்து சிந்திப்போம் .

ஆன்மீகத்தில் அறியாமை என்பது

ஆமையாக உருவெடுத்து

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை

கடைந்து அமிர்தம் எடுக்க முனைந்த போது ஏற்பட்ட

இடரை போக்கி அருளிய ஹரி என்று போற்றப்படும்

கூர்மாவதாரம் செய்தருளிய ஸ்ரீமன் நாராயணனை அறியாமல் இருப்பதுதான்.

உலக வழக்கிலும் எதையுமே அறிந்து கொள்ளாமல்

மூடராக இருப்பதும்

ஏதோ சிலவற்றை மட்டும் கற்றுக்கொண்டுவிட்டு

எல்லாம் தெரிந்தவர்கள்போல் கர்வம் பிடித்து அலைபவர்களும் மூடர்களே.

எனவேதான் ஹரி என்னும் ஆமையை நம் மனம் என்னும்

வீட்டில் புகவிட்டால் மீண்டும் பிறக்க வேண்டி இருக்காது என்பதைத்தான்

தற்போது குடியிருக்கும் வீடு அதாவது உடல் மீண்டும் உருப்பெறாது

என்பதைத்தான் உருப்படாது என்று சொல்லி வைத்தார்கள்.

எனவே பழமொழியின் உண்மையான பொருளை புரிந்து கொள்ளாமால்

அப்பாவி பிராணியான ஆமையை துன்புறுத்தி வருகிறார்கள்

இந்த மூட மக்கள் இனிமேலாவது இந்த பழமொழியின்

உண்மையான பொருளை உணர்ந்துகொண்டு

அறிவைதரும் ஹரியாகிய ஸ்ரீமன் நாராயணனை

வழிபாட்டு . உய்வார்களாக .

3 Comments:

At October 23, 2008 at 2:04 AM , Blogger Suja said...

Dear Sir,

I have read your view and find it fascinating.Is it possible that I can trouble you for more information on this.

I would like to know and understand the inner meaning of this otherwise fascinating story.

 
At October 23, 2008 at 9:22 PM , Blogger aanandam said...

It is a big subject. It will be made known little by little in this window.Story is not fiction. Every story will reveal somthing.Our effort is necesary and our unbiassed approach will enlighten the truth.
thank you for evincing interest
on this subject
The purpose of life is only to know the truth.I am one among the seekers of truth with the poor knowledge.with my intution guiding me.

 
At October 24, 2008 at 1:59 AM , Blogger Suja said...

Thank you sir for your response.I have also read all your other posts.

Looking forward to reading more through your posts.

regards

sujatha

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home