Saturday, December 26, 2009

சித்திகலெல்லாம் புத்தியை தடுமாற செய்பவை

சித்திகலெல்லாம் புத்தியை தடுமாற செய்பவை

இறைவனை நோக்கி செல்லும் ஒரு சாதகனை
திசை திருப்பி மீண்டும் அவனை இவ்வுலக
மாயையில் வீழ்த்திவிடும்

நீரிழிவு நோய் உள்ளவன் இனிப்பை
விரும்பினாலும் அது அவன்
உடலுக்கு தீங்கு செய்பவை
அவன் உயிரை பறித்துவிடும்
என்பதை அறிந்து அதை
விலக்குவது போல்
சித்திகளை வெறுத்து
ஒதுக்கவேண்டும்

அதன் மீது சிறிது விருப்பம் கொண்டாலும்
முடிவில் நம்மை அது மீண்டும் எழுந்திருக்க முடியாத
அளவிற்கு கீழே தள்ளிவிடும்.

எனவே சித்திகளை பயன்படுத்துபவர்களை
கண்டு நாம் ஒதுங்கிவிடவேண்டும்.

அவர்களால் நம்மை வழி நடத்த முடியாது.

என்று பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்
உபதேசித்திருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

TRP