ஏமாற்றம் தவிர்க்கும் வழி
எங்கு எதிர்பார்ப்புகள் இல்லையோ அங்கு ஏமாற்றங்களும் இல்லை
பகவான் தன்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பக்தி செய்பவனையும் தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளையும் முணுமுணுக்காமல் செய்பவனையும் மிகவும் விரும்புகிறான்.
தன் கடமைகளை விட்டுவிட்டு மற்றவர்களின் கடமைகளை செய்பவனை அவன் விரும்புவதில்லை.
விளம்பரதிற்க்காக பூஜை செய்பவனையும் அவன் மதிப்பதில்லை
இதயமாகிய கோயிலை அசுத்தமாக வைத்துக்கொண்டு புற உலகில் கோயிலை விளம்பரத்திற்காக தூய்மை செய்வதாக நடிப்பதும் அவனுக்கு பிரியமன்று.
அதனால்தான் அவன் பண்டரிபுரத்தில் செங்கல்மேல் நின்றுகொண்டு அதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றான்.
அதனால்தான் கண்ணன் கம்சனை பார்க்க வரும்போது யார் அழைத்தாலும்
அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் முதலில்எளிமையாக தன்னிடம்
ஆத்மார்த்த பக்தி செய்யும் விதுரரின் வீட்டிற்கு சென்றான்

<< Home