Friday, December 18, 2009

பகவான் பக்தனைதான் அதிகம் சோதிப்பான்

பகவான் பக்தனைதான் அதிகம் சோதிப்பான்
ஏன் ?
அவனுக்கு அவன் பக்தன் மேல் அதிக பிரியம்
சுகமாக வாழ்பவர்களை பற்றி அவனுக்கு அக்கறையில்லை .
இந்த உலகத்தில் ஒரு நல்ல பக்தன் கிடைப்பது
குதிரை கொம்பாக இருக்கிறது
அதனால்தான் பகவான் அவனை விடுவதில்லை
அவன் மீண்டும் உலக இன்பங்களில் மூழ்கி தன்னை
மறந்துவிடுவானோ என்றுதான் அவனை அவன்
மீண்டும் மீண்டும் சோதிக்கின்றான்
அது புரியாமல் அவன் பக்தன் பகவான்
தன்னை மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகளுக்கும்
வேதனைகளுக்கும் ஆட்படுத்துகின்றான் என்று
புலம்புகின்றான்
தங்கம் சுத்தமாக ஆக வேண்டுமெனில் .
அது நெருப்பில் புடம் போடப்படவேண்டும்
அதிலுள்ள மாசுகள் அனைத்தும் நீங்கிவிட்டால்
பிறகு அது பளிச்சென்று எப்போதும்
இருக்கிறதல்லவா
அதைப்போல்தான் துன்பங்கள் ஒவ்வொரு
மனிதனையும் அவனை இவ்வுலக
மாயையிலிருந்து விலக வழி
கட்டுகின்றன .
அதனால்தான் மகா பாரதத்தில் குந்திதேவி
கண்ணனிடம் பிரார்த்தனை செய்யும்போது
தனக்கு எப்போதும் துன்பங்களையே
தருமாறு வேண்டிகொண்டாள்
அப்போதுதான் உன் நினைவு எங்களுக்கு
எப்போதும் இருந்து கொண்டிருக்கும் என்று .
அதனால் துன்பங்களை கண்டு அஞ்ச வேண்டாம்
கவலைப்படவேணாம்
அந்த துன்பங்களை தந்த பகவானையே
நாம் சரணடைந்துவிட்டால்
அந்த துன்பங்களிலிருந்து
மீளும் வழியை அவனே நமக்கு
காட்டியருளுவான். என்பது
ஆன்றோர் கண்ட உண்மை .