Wednesday, November 4, 2009



அண்டர் குலத்திற்கு அதிபதி ஸ்ரீராமன்


தன்னை போன்ற சக மனிதர்களையே கொன்று தின்ற


அசுரர்களை அழித்தவன் ஸ்ரீராமன்


அகந்தை கொண்ட ராவணனை சம்ஹாரம் செய்தவன் ஸ்ரீராமன்


நம் மனதில் குடிகொண்டு நம்மை ஞானத்தை


அடையவிடாமல் செய்யும்அகந்தையை


அழிக்க வேண்டுமென்றால் நாம் ராம நாமத்தை


ஜபம் செய்ய வேண்டும்


நாமம் ஜெபிக்க மிக எளிது


காலம் நேரம் எதுவும் தேவையில்லை


ஆசாரங்கள் எதுவும் தேவையில்லை


அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் போதும்


ராம நாமம்தான் நமக்கு பந்தத்திலிருந்து விடுதலை அளிக்கவல்லது


மற்ற மந்திரங்கள் எல்லாம் நமக்கு காம்ய பலன்களைதான் தரும்


ராம நாமம் நம்மை எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்து நிச்சயமாக காக்கும்


நமக்கு மனசாந்தி அளிக்கும்


நம்மை எப்போதும் கவசம்போல் இருந்து ராமநாமம் சொல்பவரை


காக்கும் என்பதை அந்த மந்திரத்தை சொல்பவர்கள் அனுபவத்தில் உணரலாம்


எல்லோரும் கைவிட்டாலும் ராம நாமம் நம்மை என்ன்னிலையிலும் கைவிடாது


இது சத்தியம் சத்தியம் .


நம்முடைய ஆன்மாவில் ஸ்ரீராமன் கொலு வீற்றிருக்கின்றான்.


அவன் நாமத்தை விடாது சொல்பவர்கள் இதயத்தில்


அவனை சத்தியமாக தரிசிக்க முடியும்.


ஸ்ரீராமனின் உருவம் உங்களுக்காக ஓவியமாக


ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home