Friday, October 24, 2008

நாடவேண்டியது இறைவனை மட்டுமே

இறைவனிடம் உண்மையான பக்தி கொண்டோர்
அவனை தவிர வேறு எதையும் நாடார் .
அவன் திருவுருவத்தை வணங்கி
அவன் புகழ் பாடி இன்புற்று

அவன் திருவடியை பூசனை
செய்வதை விடுத்து ..

சொர்கத்தின் தன்மையறியாரே
அதை நாடுவர்
அங்கு நம்மையெல்லாம் காத்து
ரக்ஷிக்கும் தெய்வங்கள் உறையும்
ஆலயங்கள் இல்லை
அவன் புகழை பாடி பரவும்
பக்தர் கூட்டம் இல்லை
பெண் பித்து பிடித்து அடிக்கடி
சொல்லொணா பாவங்களை செய்து
ஆபத்தில் மாட்டிக்கொண்டு பதவி இழந்து
அஞ்சி மறைந்து வாழும் தேவேந்திரனை
தலைவனாக கொண்டு தேவர்களின்
நாடு எப்படி இருக்கும் என்பதை
உணர்ந்தோர் சொர்கத்தை நாடுவரோ ?

எனவேதான் தொண்டரடிப்பொடி
ஆழ்வாரும் திருவரங்கத்தில்
பள்ளி கொண்ட பச்சை மா மலைபோல்
மேனியனை பவளவாய் கமல
செங்கண்ணனை ,அச்சுதனை
தேவாதி தேவனை இப்புவுலகில்

மனோ வாக்கு காயத்தினால் வணங்கி
சுவைத்து இன்புறுவதை விடுத்து
இந்திர லோகமாளும் சுவை பெரிதென்று
கருதி அதை நாட மாட்டேன்
என்று அறுதியிட்டு பாடியுள்ளதை
புரிந்துகொள்ள வேண்டும் .
அவரை போல் நாமும் பகவானிடத்தில்
அவனை தவிர வேறு ஒன்றையும் யாசிக்காமல்

பக்தி செய்து துன்பமில்லா
பெருவாழ்வை அடைவோம் .

Posted by Picasa

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home