Wednesday, January 21, 2009

ஞானம் பிறக்க..

ஞானம் பிறக்க வேண்டுமென்றால்
கடவுளின் நாமத்தை கானம் பண்ணு

மானம் போனாலும்
அவமானம் வந்தாலும்
அவன் பாதமே கதி என்று இரு

எதை பெற்றாலும்
எதை இழந்தாலும்
எதுவும் தனக்கில்லை என்று
எண்ணிவிடு

பிறக்கும்போது
எதையும் கொண்டுவராதபோது
இவ்வுலகில் இருந்து போகும்போது
மட்டும் எதைக் கொண்டுபோக முடியும்?

இருப்பதை இல்லாதவருக்கு
கொடுத்தால் இன்பம் கிடைக்கும்
தேவைக்குமேல் எடுத்துகொண்டால்
இயற்கை நம்மிடமிருந்து உள்ளதையும் பறித்து
நம்மை துன்பத்தில் தள்ளிவிடும்
எச்சரிக்கை!

நீ எதை பிறருக்கு அளிக்கிறாயோ
அதுவே உனக்கு திரும்பக் கிடைக்கும்
இன்பமோ அல்லது துன்பமோ
அதை நீயே முடிவு செய்துகொள்.

Monday, January 5, 2009

திருவாதிரை திருநடனம்

திருவாதிரை நன்னாளில் திருவாலங்காடு அழகனின் ஆனந்த நடனம் கண்டு தரிசித்து ஆனந்தம் பெறுவோம்
Posted by Picasa