divinebliss
Wednesday, October 29, 2008
Friday, October 24, 2008
நாடவேண்டியது இறைவனை மட்டுமே
இறைவனிடம் உண்மையான பக்தி கொண்டோர்
அவனை தவிர வேறு எதையும் நாடார் .
அவன் திருவுருவத்தை வணங்கி
அவன் புகழ் பாடி இன்புற்று
அவன் திருவடியை பூசனை
செய்வதை விடுத்து ..
சொர்கத்தின் தன்மையறியாரே
அதை நாடுவர்
அங்கு நம்மையெல்லாம் காத்து
ரக்ஷிக்கும் தெய்வங்கள் உறையும்
ஆலயங்கள் இல்லை
அவன் புகழை பாடி பரவும்
பக்தர் கூட்டம் இல்லை
பெண் பித்து பிடித்து அடிக்கடி
சொல்லொணா பாவங்களை செய்து
ஆபத்தில் மாட்டிக்கொண்டு பதவி இழந்து
அஞ்சி மறைந்து வாழும் தேவேந்திரனை
தலைவனாக கொண்டு தேவர்களின்
நாடு எப்படி இருக்கும் என்பதை
உணர்ந்தோர் சொர்கத்தை நாடுவரோ ?
எனவேதான் தொண்டரடிப்பொடி
ஆழ்வாரும் திருவரங்கத்தில்
பள்ளி கொண்ட பச்சை மா மலைபோல்
மேனியனை பவளவாய் கமல
செங்கண்ணனை ,அச்சுதனை
தேவாதி தேவனை இப்புவுலகில்
மனோ வாக்கு காயத்தினால் வணங்கி
சுவைத்து இன்புறுவதை விடுத்து
இந்திர லோகமாளும் சுவை பெரிதென்று
கருதி அதை நாட மாட்டேன்
என்று அறுதியிட்டு பாடியுள்ளதை
புரிந்துகொள்ள வேண்டும் .
அவரை போல் நாமும் பகவானிடத்தில்
அவனை தவிர வேறு ஒன்றையும் யாசிக்காமல்
பக்தி செய்து துன்பமில்லா
பெருவாழ்வை அடைவோம் .
Thursday, October 23, 2008
மாலவன் அந்தாதி
19.வீணே அலையும் என் மனமே
விபீடணனுக்கு அருள் செய்த
வீரராகவ பெருமானின்
மலர்த்தாளை பணிந்து
பெறுவாய் அமைதி
வாழ்நாள் முழுவதும்
20 வாழ்நாள் முழுதும் எங்கு
தேடினும் கிடைக்காத
எம்பெருமானை திருவள்ளூரில்
கண்டெடுத்து நமக்களித்த
ஸாலிஹொத்ர முனியை
நினைத்தாலே பாபம் தொலையும்
பாச வினைகள்
அகன்றிடும் .
(மாலவன் அந்தாதி -திருமாலடியான் )
நினைத்தாலே முக்தி தரும் அருணாசலம்
ஒளி மயமாய் நாத மயமாய் , இருக்கும் இறைவன்
அக்னி ஸ்வரூபமாய் விளங்கும் ஈசன் குளிர்ந்தான்
அண்ணாமலையாக கோயிலில் சிலையாய் நின்றான்
உண்ணாமுலை உடனுறை அருணாச்சல ஈஸ்வரராக
அடியவருக்கு காட்சி தரும் பொருட்டே !
அவன் திருப்பாதம் போற்றி !
மும்மலங்களை நீக்கி முக்தியை தரும்
முக்கண்ணனே போற்றி
அடி முடி காண இயலா
ஆலவாய் அழகனே போற்றி
சித்தர்கள் இதயத்தில் வீற்றிருக்கும்
Wednesday, October 22, 2008
இறை ஞானம்
காண்பதனைத்தும் இறைவனே
ஆம் நாம் இவ்வுலகில் காண்பதனைத்தும் இறைவனே
காண்பதனைத்தும் அவனின்
கைவண்ணம் அன்றி வேறொன்றுமில்லை
நாம் பயன்படுத்தும் அனைத்து
பொருட்களும் அவனுடையதே
நம்முடைய உயிரும்
அது தங்கியுள்ள உடலும் அவன் அளித்ததே
நமகென்று எதுவுமே சொந்தமில்லாத நிலைமையில்
நான் என்றும் .எனது என்றும் என்ற எண்ணம்
எங்கிருந்து வந்தது ?
அதுதான் மாயை
மாயை நீங்க மாயவனை சிந்திக்க வேண்டும்
அப்போதுதான் உடல் மீதும்
உடைமைகள் மீதும் மோகம் நீங்கி ஞானம் சித்திக்கும்
ஏமாற்றமில்லாமல் வாழ எந்த செயலையும்
பலன் கருதாது செய்யவேண்டும்
அகந்தை நீங்க இறைவனிடம்
முழு நம்பிக்கை வைத்து அனைவரையும்
இறைவனின் வடிவங்களாக கருதி சேவை செய்ய வேண்டும்
தனக்கு துன்பம் விளைவிக்கிறவர்களிடமும் கூட
அன்பு காட்டவேண்டும் .
மேலே கண்டவற்றை நினைவில் கொண்டு
வாழ்க்கையை நடத்தினால் துன்பமில்லா வாழ்வும்
ஞானமும் ஒருங்கே சித்திக்கும் .
இவ்வுலகில் அனேக மஹான்கள் பாடுபட்டு
இறைஅருளை பெற்று மரணமில்லா
பெருவாழ்வை அடைந்துள்ளார்கள்.
.நாமும் முயற்சி செய்தால்
அந்த நிலையை அடைவது சாத்தியமே .
Monday, October 20, 2008
மைகள் உணர்த்தும் பாடம்
இந்த உலகத்தில் எத்தனையோ மைகள் இருக்கின்றன.
சில மைகள் நமக்கு இன்பங்களை தருகின்றன
சில மைகள் நமக்கு துன்பங்களை பரிசாக தருகின்றன
சில மைகள் நமக்கு சில உண்மைகளை உணர்த்துகின்றன
மையில்லாவிடில் இந்த உலகமே இல்லை
இனி ஒவ்வொன்றாக மைகளை பற்றி அலசுவோம்.
முதலில் எதை தொடங்கினாலும் இறைவனை நினைந்து
தொடங்குவது இறை நம்பிக்கை உள்ளவர்களது மரபு.
காக்கும் கடவுளான திருமால் இந்த உலகை காக்க
எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்று கூர்மாவதாரம் அதாவது
ஆமை உருவெடுத்து தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில்
அமுதம் பெற மந்தர மலையை மத்தாக கொண்டு கடையும்போது
அச்சு இல்லாத காரணத்தினால் மலை கடலில் மூழ்கியபோது
அதன் ஆமையாக உருவெடுத்து மலையை
மூழ்காமல் தடுத்து காப்பாற்றியது அனைவருக்கும் தெரியும்.
அவ்வாறு கடையும்போது கடலை கடைய மத்தாக பயன்படுத்தப்பட்ட
வாசுகி என்னும் பாம்பு ஆலகால நஞ்சை வெளிப்படுத்த
உலக உயிர்களை காப்பாற்ற சிவபெருமான் அந்த நஞ்சை உண்டதாகவும்
ஆனால் பார்வதி தேவி அந்த நஞ்சை
சிவபெருமானின் கண்டத்தில் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் .
புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன
இந்த கதையை பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளாக மக்கள் கேட்டு கொண்டு வருகிறார்கள்.
அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை
இதுவரைக்கும் புரிந்துகொள்ளவில்லை என்பதே என் துணிபு.
ஏனென்றால் புராண கதைகள் எதையும் நேரடியாக சொல்வதில்லை
ஒவ்வொரு கதைக்கு பின்னாலும் ஒரு கருத்து,
ஒரு இலக்கை அடைய வழிமுறைகள் நிச்சயம் இருக்கும்.
அதை ஆராய்ந்து அறிந்துகொண்டால்
நமக்கு உண்மையை உணர்ந்து உய்வதற்கு வழி வகுக்கும் .
இனி தொடர்ந்து ஆராய்வோம்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற பழமொழி என் வந்தது.?
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது உலக வழக்கில் இருக்கும் ஒரு பழமொழி .
உலகில் எத்தனையோ பழமொழிகள் அதன் உண்மை தன்மையை இழந்து வழக்கத்தில் உள்ளதைபோல இந்த பழமொழியும் ஒன்று
. இந்த இடத்தில் வீடு என்பதை மனிதனின் மனம் பொருள் கொள்ள வேண்டும்
.அது சரி ஏன் ஆமை புகுந்த வீடு உருப்படாது ?
வீடு உருப்படுவதர்க்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு என்று யாரும் சிந்திப்பதில்லை
.முதலில் வழக்கில் உள்ள மொழியின் பொருளை பார்ப்போம் .
ஆமை என்றால் அறியாமை , பொறாமை என்று கொள்ள வேண்டும்
மக்கள் அதை வசதியாக மறந்து விட்டு அப்பாவி பிராணியான ஆமையை கண்டவுடன் அதை கொல்வதும் அதன் இறைச்சியை உண்பதும் செய்கின்றனர் .
ஆனால் அதன் உயரிய குணங்களை மனிதர்கள் கைகொண்டால் பல நூறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ முடியும் என்று பல பேருக்கு தெரியாது.
அதன் இதய துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் பல நூறு ஆண்டுகள் வாழ்கிறது.அதுபோல மனிதனும் உணர்ச்சி வசப்படாமல் தன் மூச்சினை கட்டுபடுத்தி இதய துடிப்பின் வேகத்தை குறைத்தால் அவனும் நீண்ட நாள் வாழ இயலும் என்பதை பல சித்த புருஷர்கள் நிருபித்து வாழ்ந்து காட்டி உள்ளார்கள்....
தன் உறுதியான மேல் ஓட்டுக்குள் தன் வாய் மற்றும் நான்கு கால்களை இழுத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துகொள்வதைபோல் மனிதனும் தன்னுடைய ஐம்புலன்களை வெளியே செல்லாமல் அடக்கி கட்டுபடுத்தினால் அவன் யோக மார்க்கத்தில் முன்னேற முடியும் என்பதற்க்கு உதாரணமாக ஆமையை தான் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
நிலைமை அப்படி இருக்க மக்கள் அமைதியான இந்த பிராணி மீது களங்கம் சுமத்தி அதை துன்புறுத்துவது அவர்களின் அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.
ஒரு மனிதனை அழிவு பாதையில் கொண்டு செல்வது பொறாமை என்ற ஆமையே.இந்த கெட்ட குணம் ஒன்று இருந்தால் போதும் மற்ற அனைத்து தீய குணங்களும் தானாகவே அவனிடம் வந்து சேர்ந்து விடும். பிறகு அவனும் உருப்படமாட்டான் , மற்றவரையும் உருப்படவிடமாட்டான். .அது மனத்தில் தோன்றியவுடன் அவன் நேர்மையாக சிந்திக்கும் பண்பை இழந்துவிடுகின்றான் .அவனின் தன்னம்பிக்கை போய்விடுகிறது . தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருந்தால் தானும் அதை குறுக்கு வழியில் பெற முனைகின்றான் .குறுக்கே வருகின்றவர்களை எல்லாம் வெறுக்கின்றான் ,அவர்களை அழிக்கவும் செய்கின்றான். முடிவில் அவனும் அழிந்து போகின்றான் .
எனவேதான் பொறாமை குணத்தை திருவள்ளுவர் அழுக்காறு என்று குறிப்பிடுகின்றார் .
எனவே உருப்படாமல் போவதற்கு ஆமை என்ற ஜந்து காரணமல்ல பொறாமை என்னும் தீய குணமே காரணம் என்பதை அறிந்துகொண்டு அந்த தீய குணத்திலிருந்து நம்மை விடுவித்துகொண்டால் நன்மைகளை அடையலாம்.என்பதே உண்மை .
எல்லாவிதமான துன்பத்திற்கும் மூலகாரணமான அறியாமையை பற்றி தொடர்ந்து சிந்திப்போம் .
ஆன்மீகத்தில் அறியாமை என்பது
ஆமையாக உருவெடுத்து
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை
கடைந்து அமிர்தம் எடுக்க முனைந்த போது ஏற்பட்ட
இடரை போக்கி அருளிய ஹரி என்று போற்றப்படும்
கூர்மாவதாரம் செய்தருளிய ஸ்ரீமன் நாராயணனை அறியாமல் இருப்பதுதான்.
உலக வழக்கிலும் எதையுமே அறிந்து கொள்ளாமல்
மூடராக இருப்பதும்
ஏதோ சிலவற்றை மட்டும் கற்றுக்கொண்டுவிட்டு
எல்லாம் தெரிந்தவர்கள்போல் கர்வம் பிடித்து அலைபவர்களும் மூடர்களே.
எனவேதான் ஹரி என்னும் ஆமையை நம் மனம் என்னும்
வீட்டில் புகவிட்டால் மீண்டும் பிறக்க வேண்டி இருக்காது என்பதைத்தான்
தற்போது குடியிருக்கும் வீடு அதாவது உடல் மீண்டும் உருப்பெறாது
என்பதைத்தான் உருப்படாது என்று சொல்லி வைத்தார்கள்.
எனவே பழமொழியின் உண்மையான பொருளை புரிந்து கொள்ளாமால்
அப்பாவி பிராணியான ஆமையை துன்புறுத்தி வருகிறார்கள்
இந்த மூட மக்கள் இனிமேலாவது இந்த பழமொழியின்
உண்மையான பொருளை உணர்ந்துகொண்டு
அறிவைதரும் ஹரியாகிய ஸ்ரீமன் நாராயணனை
வழிபாட்டு . உய்வார்களாக .
திருமூலர் காட்டும் பரம்பொருள்
திருமூலரின் திருமந்திரத்திற்கு பண்டிதர்கள் பலவிதமாக பொருள் கூறுவார்கள்.ஆனால் என்னை போன்ற படிக்காத பாமரர்கள் கூறும் விளக்கத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம்.
ஒரு யானை பொம்மை ஏதோ
ஒரு மரத்தால் செய்யப்பட்டுள்ளது.
அந்த பொம்மையை பார்க்கும்போது
முதலில் நம் மனதில் தோன்றுவது அது ஒரு யானை பொம்மை என்றுதான்.
பிறகு அது அழகாக இருக்கிறதா,யார் செய்தது, எங்கு வாங்கியது,
என்ன விலை ,இந்த பொம்மையை நாமே வைத்து கொள்ளலாமா
அல்லது யாருக்காவது பரிச்ளிக்கலாமா என்றெல்லாம்
தொடர்ந்து மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றுகின்றன .
அல்லது நம் கவனம் வேறு எந்த பொருள் மீதோ
அல்லது ஏதாவது வேதனையில் மூழ்கி இருந்தாலோ அந்த பொம்மை நம் எதிரில் இருந்தும் அது நம்மை பாதிப்பதில்லை.
நாம் யானையை மட்டும் மனதில் கொண்டு பார்க்கும்போது
அது மரத்தினால் செய்யப்பட்ட யானையா
அல்லது உலோகத்தினால் செய்யப்பட்ட யானையா என்பதை பற்றி சிந்திப்பதில்லை.
ஆனால் பொம்மை எந்த மரத்தினால் செய்யப்பட்டுள்ளது
என்று ஆராயும்போது யானையை மறந்துவிடுகிறோம்.
அதைத்தான் திருமூலர் ஒரு உண்மையை உணர்த்துகின்றார்.
மனம் எதை நினைக்கின்றதோ அதைத்தான் வெளி உலகில் காண்கின்றோம் என்பதை
தெளிவாக உணர்த்துகின்றார்.
மேலேகண்ட உதாரணத்தின் மூலம் பரம்பொருளை நமக்கு உணர்த்த முற்ப்படுகின்றார்
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம்.
பரம் என்றால் பரம்பொருள் அதாவது கடவுள்.
கடவுள் நம் எதிரிலேயே இருக்கிறார்,மற்றும் நமக்குள் இருந்துகொண்டும் நம்மை எல்லாம் இயக்கவும் செய்கிறார்.
கடவுள் நம் எதிரிலேயே இருந்தால் அவர் ஏன் நம் கண்களுக்கு தெரியவில்லை?
காரணம் என்ன?
நாம்தான் காரணம்,நம் எண்ணம்தான் காரணம்.எப்படி?
கடவுளை நாம் காண முடியாமல் மறைப்பது எது?அதுதான் பார் முதல் பூதம்
பார் என்றால் என்ன ?
இந்த உலகம் .மற்றும் இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்கள் .
இவைகளுடன் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருப்பதால் இவை அனைத்திற்கும் ஆதாரமான பரம்பொருளை நம் எதிரிலேயே இருந்தும் நம்மால் காண முடிவதில்லை.
இவைகளை பற்றியே நாம் எப்போதும் சிந்தித்துகொண்டிருப்பதால்
அவைகளை பற்றிய எண்ணங்கள்
பரம்பொருளை நாம் காண முடியாமல் செய்துவிடுகின்றன.
அதற்க்கு என்ன வழி?
நாம் இவ்வுலகம் மற்றும் அனைத்து உயிரினங்களை மறந்து
பரம்பொருளை மட்டும் சிந்தித்தோமானால்
அவைகள் அனைத்தும் மறைந்து பரம்பொருள் மட்டும் நமக்கு காட்சியளிக்கும்.
இந்த உண்மையை புரிந்துகொள்ள
இன்னும் ஒரு உதாரணம்
ஒரு வெள்ளை சுவரை பரம்பொருள் என்று வைத்து கொள்வோம்.
அதில் உள்ள ஒரு கரும்புள்ளி பார் முதல் பூதம் என்று வைத்துகொள்வோம்
சுவரை மட்டும் நாம் பார்த்தால் கரும்புள்ளி தெரியாது.
புள்ளியை பார்த்தால் சுவர் தெரியாது.
ஆனால் இரண்டும் நம் கண் முன்னேதான் இருக்கின்றன.
எல்லாம் நம் பார்வையில்தான் இருக்கிறது.
பார்க்க தெரிந்துகொண்டுவிட்டால்
உண்மைகள் தானே புரிந்துவிடும்.
குழப்பங்கள் தீர்ந்துவிடும்
வேறுபாடுகள் அகன்றுவிடும்
உள்ளத்தில் அமைதி பிறந்துவிடும்
.
Thursday, October 16, 2008
Wednesday, October 8, 2008
Monday, October 6, 2008
மனம் என்னும் குப்பை தொட்டி
மனம் என்னும் குப்பை தொட்டி.உங்கள் மனத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் நீங்களாகவே இருக்கிறீகளா?அது உங்களுக்கு தெரியாது.ஏனென்றால் நீங்களே யார் என்று உங்களுக்கு தெரியாது.பிறகு மனதில் என்னதான் இருக்கிறது?நீங்கள் இவ்வுலகில் பிறக்கும்போது கொண்டு வந்த பதிவுகள்,உங்கள் தாய் வயிற்றில் இருந்தபோது பதியப்பட்ட சம்பவங்கள்,பிறந்த பிறகு இன்று வரை உங்களுக்கு மற்றவர்கள்வழங்கிய அறிவுரைகள்,திட்டுக்கள், மற்றும் நீங்களாகவே மற்றவர்களை பார்த்து, கேட்டு அவர்கள் போல் நடக்க பழகியது தொடர்பான பதிவுகள் இவைகள்தான் உங்கள் மனதில் இருக்கிறது.அவைகள் எல்லாவற்றையும் கூண்டோடு வாரி வெளியே அப்புரபடுத்தினால்தான் நீங்கள் யார் என்பதை உங்களால் அறிய முடியும்.அது அவ்வளவு எளிதான காரியமில்லை இருந்தாலும் சிலர் முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளார்கள்.
அவர்களில் ஒருவர்தான் பகவான் ரமண மஹரிஷி..


