Monday, July 27, 2009

சொல் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

சொல் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?
திருவள்ளுவர் திருக்குறளில் கூறுகின்றார்
கேளுங்கள் (அதிகாரம் 10 இனியவை கூறுதல்)

1.சொல்லப்படும் சொற்களில் அன்பு கலந்திருக்க வேண்டும்
2.அதில் வஞ்சக எண்ணங்கள் கலந்திருக்கக்கூடாது
3.அதை மலர்ந்த இன்முகத்தோடு பேசக்கூடிய
சொல்லாக இருத்தல் வேண்டும்
4.சொல்லப்படும் சொற்கள் இனிமை பயத்ததாக
இருத்தல் வேண்டும்
5.எல்லோரிடமும் இனிமையாக பேசுபவனை
வறுமை என்றும் அணுகாது
6.பணிவோடு அகந்தையின்றி
இனிமையாக பிறரிடம் பேசுவதே
ஒரு மனிதருக்கு நல்ல அணிகலன் .
உடலின்மீது அவன் அணிந்துகொள்ளும்
ஆபரணங்கள் அன்று
7.நன்மை பயக்கும் இனிய சொற்கள்
இருக்கும்போது மனிதர்கள் ஏன் துன்பம்
விளைவிக்கும் கடும் சொற்களை
பயன்படுத்துகின்றாரோ ?
8.சுவையான பழங்கள் போல்
இனிய சொற்கள் இருக்கும்போது இனிப்பற்ற காய்களைபோன்ற
கடும் சொற்க்களை பயன்படுத்தலாமோ ?

இனிமையான நன்மை விளைவிக்கும் சொற்க்களை பேசி பிறரை இன்புற செய்து நாமும் இன்புறுவோமாக

Thursday, July 2, 2009

பட்டினத்தார் /டாவோயிசம்

பட்டினத்தார் /டாவோயிசம்
பிறந்தன இறக்கும்
இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும்
மறைந்தன தோன்றும்
உவப்பான வெறுப்பாம்
வெறுப்பான உவப்பாம்
இன்பமும் துன்பமும்
இருநிலத்து அருந்தினை
ஒன்றைஒன்று ஒழியாது உற்றவை
ஒன்றைவிட்டு ஒன்றை பிரிக்க முடியாததால்
இரண்டையும் சேர்த்தே ஏற்றனை

மனிதன் தனக்கு பிடித்தமானதை
தனியே பிரித்து அடைய நினைக்கிறான்
இயற்க்கைக்கு மாறானது என்பதால்
அதன் விளைவுகளால் துன்பப்படுகிறான்

பிறப்பு நேரிட்டால் இறப்பு நேரிடும்
மரியாதையை விரும்பினால் அவமரியாதை தொடரும்

இரண்டையும் சேர்த்து ஏற்றுக்கொள்
இல்லாவிட்டால் இரண்டையும் சேர்த்தே விட்டுவிடு

அழகென்பதும் அவலக்ஷனம் என்பதும் கிடையாது
இயற்க்கை அதனதன் போக்கில், இருக்கிறது
அதை நீ தேவையில்லாமல் கூறுபடுத்துகிறாய்
உன்னுடைய தேர்வையோ உன் புறந்தள்ளலையோ
இயற்க்கை தன்னுடைய வழிமுறையாக கொள்வதில்லை

நன்மை தீமை என்னும் இரு கூறுகள் ஒரு நாணயத்தின்
இரு பக்கங்கள் போல
நன்மையில் தீமையின் கூறுகளும்
தீமையில் நன்மையின் கூறுகளும்
இருந்தே தீரும்
இருவினை மலத்தை அறு
இரவு பகல் ,இகம் பரம், வரவு,செலவு
என்று பிரித்து எண்ணப்படுகின்ற நிலையினை கடந்து
தில்லை ஜோதியை நினை
எனது அற
நினைவு அற
இருவினை மலம் அற
வரவோடு செலவு அற
மருள் அற
இரவோடு பகலற
இகம் பரம் அற
ஒரு முதல்வனை தில்லையில் முளைத்தெழும் ஜோதியை நினை.