இறைவா உன்னிடம் வேண்டுகிறேன்
இன்றைய பொழுது இனிதாய் விளங்கிட
இறைவா உன்னிடம் வேண்டுகிறேன்
காணும் அனைத்திலும் நிறைகளையன்றி
குறைகளை காணா மனம் தந்திடுவாய்
எனக்கு இன்றுமுதல்
வீட்டிலும் நாட்டிலும் அமைதி நிலவியே
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு
வாழ அருள் செய்திடுவாயே
வலியவர் எளியவரை வதைப்பதை விடுத்து
அவர்கள் வாழவழி வகை செய்ய உதவும் நற்குணம்
மலர்ந்திட செய்வாயே
சுற்றுப்புரத்தினை அழித்து சுகாதாரத்தை கெடுத்து
நோயில் வீழ்ந்து தவிக்கும் மக்களுக்கு
நல்லறிவினை அளித்து நலம்
பெற செய்திடுவாயே
மதியை மயக்கும் போதை பொருட்களை விடுத்து
,மதியை கெடுக்கும் காட்சிகளை காண்பதை தவிர்த்து
மனதை பண்படுத்தும் நல்லிசையில்
நாட்டம் கொண்டிட செய்வாயே
மக்கள் உள்ளத்தில் கள்ளம் நீங்கியே
அன்பு பெருக்கெடுத்து இவ்வுலகை
இன்புலகமாக மாற்றிடுவாயே
சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகள் நீங்கி
அனைவரும் சமாதானமாக சமரச வாழ்வு
வாழ அருள் செய்திடுவாயே .
